Header Ads

மன்னார், பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில், சிரமதானப் பணி..!

மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் கார்த்திகை 27 ம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்காக, மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு இன்றைய தினம் ( 07.11.2017)  காலை 09.00 மணிக்கு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்ப்பாட்டு குழு ஏற்பாடு செய்த இவ் சிரமதான ஆரம்ப பணியில்  மாவீரர்களின் குடும்பங்கள் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இம்முறை  சிறப்பான முறையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை நடாத்த வேண்டுமென்றும். தொடர்ந்து நடைபெறவிருக்கும் சிரமதான  பணியிலும் அனைவரும்  ஒத்துழைப்பு தருமாறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டனர்.













No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.