Header Ads

உலக அழகி பட்டத்தை வென்ற, இந்திய பெண் யார் தெரியுமா..?

2017 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி நேற்று சீனாவில் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 108 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த அழகிப்போட்டியில் இந்தியாவில் உள்ள ஹரியானாவை சேர்ந்த (21) மனுசி சில்லர் என்ற இளம் பெண் கலந்துகொண்டார். 
இவர் அந்த போட்டியின் இறுதி சுற்று வரை சென்று போட்டியில் வெற்றிபெற்றார். இவர் தான் இந்த பட்டத்தை பெற்ற  இரண்டாவது இந்திய பெண். இவருக்கு முன் பிரியங்கா சோப்ரா தான் இந்த படத்தை வாங்கியுள்ளார்.
மேலும், மனுஷி சில்லர் ஏற்கனவே இந்தியாவில் நடந்த போட்டியில் இந்தியாவின் அழகியாக தேர்ந்தெடுக்கபட்டவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் வாங்கினார் இவர். இவருக்கு தற்போது பல வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
 அது மட்டுமில்லாமல் இவர் ஒரு மருத்துவ மாணவி என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.