Header Ads

பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு..! எதற்காக தெரியுமா..?

டனாங்(வியாட்நாம்): இந்தியாவையும், மக்களையும் பிரதமர் மோடி வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


ஜனநாயக நாடு

வியாட்நாமில் நடக்கும் ஆசியா பசுபிக் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது: இந்தியா 70வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்தியா இறையாண்மை மிக்க ஜனநாயக நாடு. நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறது. 


வெற்றிகரமாக

இந்தியா தனது பொருளாதாரத்தை திறந்து விட்டவுடன், அதன் வளர்ச்சி அபாரமானதாக உள்ளது. இந்திய மக்களையும், நாட்டையும் ஒன்றாக கொண்டு வர பிரதமர் மோடி கடுமையாக உழைத்து வருகிறார். இதனை அவர் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.