Header Ads

சிங்கள பொலிசாருக்கு கிடைத்த மரண அடி இதுதான்: வழக்காடி வென்ற லண்டன் பெண் இவர் தான் !



இலங்கைக்கு சுற்றுலா சென்றவேளை, கையில் புத்தர் படத்தை பச்சை குத்தியுள்ளார் என்று கூறி சிங்களப் பொலிசார் நெயோமி என்ற இப்பெண்ணை தடுத்துவைத்தார்கள். சுமார் 4 நாட்கள் தடுத்துவைத்து. பின்னர் அவரை மீண்டும் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தினார்கள் சிங்களப் பொலிசார். இதனை எதிர்த்து நெயோமி இலங்கை உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுத்தார்.

2014ம் ஆண்டு நடந்த இச் சம்பவம் சிலருக்கு நினைவிருக்கலாம். நேற்று இதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. பொலிசாரை கண்டித்த உச்ச நீதிமன்றம். இப்பெண்ணை இலங்கை பொலிசார் நடத்திய விதம் கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளதோடு. சுமார் 8 லட்சம் ரூபாயை(4,00பவுண்டுகளை) நஷ்ட ஈடாக வழங்குமாறு பணித்துள்ளது. இத்தொகையை சம்பந்தப்பட்ட பொலிசாரே வழங்கவேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை அறிவித்துள்ளது.

அத்தோடு அவர் இலங்கை வர இனி தடை இல்லை என்றும். பழைய ஆவணங்கள் அழிக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையையும் உச்ச நீதிமன்றம் முன்மொழிந்துள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.