Header Ads

​மனைவி உடல்நலம் சரியில்லாததால், கணவன் எடுத்த விபரீத முடிவு..

நாகூர் அருகே மனைவி உடல் நிலை சரியில்லாததால் ஏற்பட்ட விரக்தியில் கணவன் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட துயரம் அரங்கேறியுள்ளது.

நாகூர் - வேளாங்கண்ணி இடையேயான ECR சாலையில்  புத்தூர் என்கிற இடத்தில்  மூடப்பட்ட டாஸ்மாக் கட்டிடத்தின் மாடியில் மூன்று சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது  விழுந்தமாவடி மணல்மேடு பகுதியைச் சேர்ந்த தர்மராஜன் தனது இரு மகன்களுடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 

தர்மராஜன் மனைவி கவிதா உடல்நிலை சரியில்லாமல் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஏற்பட்ட  விரக்தியால் மன உளைச்சலில் இருந்த தர்மராஜன் தனது இரண்டு ஆண் குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் நாகை மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.