தனது தோழியை ஓரினச் சேர்க்கைத் திருமணம் செய்யவுள்ளார், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை..!

அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர், மேகன் ஸ்கட் தனது தோழியை விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
குறித்த தகவலை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கிகரிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சுமார் 60 சதவீததிற்கும் அதிகமானவர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த சட்டமூலம் எதிர்வரும் நத்தார் பண்டிகைக்குள் சட்டமாக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் மல்கம் டர்ன் புல் அறிவித்துள்ளார்.
இதனையடுத்தே, 24 வயதான மேகன் ஸ்கட் தனது தோழியான ஜெஸ் ஹோலியாக்கை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்