சிம்புவைப் போல், சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா.. வலுக்கும் எதிர்ப்புகள்.
நடிகை ஜோதிகா சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். 9 வருடங்கள் கழித்து வந்தாலும் அவர் அடுத்து நடித்த மகளிர் மட்டும் படம் தான் கைகொடுத்தது.
இந்நிலையில் முக்கிய இயக்குனரான பாலாவின் நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வருகிறார். இதன் டீசர் நேற்று முன் தினம் வந்தது.
டீசரில் ஜோ பெண்ணை இழிவுபடுத்தும் விதமான கெட்ட வார்த்தை சொல்வதை அப்பட்டமாக காண்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கு இந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜோதிகாவை இப்படி ஆபாசமான வார்த்தையை பேச வைத்து படத்திற்கு விளம்பரம் தேடுவதா என கேள்வி எழுப்பியுள்ளார்கள். படத்திலும் இது தொடருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்