நோயாளிகள் பலரிற்கு , விசம் கொடுத்துக் கொலை செய்த தாதி !

ஜேர்மனியில், நோயாளிகள் பலரிற்கு , தாதி ஒருவர் விசம் கொடுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் குற்றம் தொடர்பில், தண்டனை அனுபவித்து வரும் நீல்ஸ்ஹோகெல் என்ற தாதி, இதுவரை நூறு வரையான நோயாளிகளை அவ்வாறு மரணிக்கச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது என ஜேர்மன் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நோயாளர்களை இவ்வாறு மரணிக்க செய்த குற்றத்திற்காக, குறித்த தாதி, ஆயுள் தண்டனையினை அனுபவித்து வருகிறார்.
ஆனாலும் புதிதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, அவர் கடமையாற்றிய 2 வைத்தியசாலைகளில் நூறு பேர்வரையிலான நோயாளிகளை கொன்றிருப்பது தெரியவந்துள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்