உலகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற, மாவீரர் தின நிகழ்வுகள்..
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களும், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களும் மாவீரர் தினத்தை உணர்வெழுச்சியுடன் நடத்தி வருகின்றனர்.மாவீரர் வாரமானது கடந்த 21ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்று இறுதி நாளான இன்று உணர்வெழுச்சியுடன் சுடர் ஏற்றி, மலர் தூவி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தால் 1989ஆம் ஆண்டிலிருந்து மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டு வருகின்றது.
தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களின் கல்லறைகளில் அவர்களது உறவுகள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்