வவுனியா பேருந்து நிலையத்தில், அதிகமாகும் கஞ்சா புழக்கம்..?
கஞ்சா விற்பனை நிலையமாக மாறும் வவுனியா பேருந்து நிலையம். வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று (04.11) காலை 10.30 மணியளவில் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வவுனியா பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.
யாழ்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி செல்ல இருந்த 45 வயதுடைய பரமசாமி ராமநாதன் என்பவரை வவுனியா பேருந்து நிலையத்தில் சோதனை செய்த போதே அவரது உடமையில் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்படுவதுடன் குறித்த நபரை வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை கஞ்சாவின் கூடாரமாக மாறிவருகிறதா வவுனியா பேருந்து நிலையம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் கடந்த நாட்களில் தினமும் வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சா கிலோ கணக்கில் தொகையாக பொலிஸாரினால் கைப்பற்றப்படுகின்றதே இதற்கு காரணம்!

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்