Header Ads

வீட்டில் இருந்த, திண்பண்டங்களை சாப்பிட்டு தூங்கிய திருடன் கைது..

ஸ்காட்லந்து நாட்டின் வடக்கு லனர்க்சிரின் பகுதியில் நடைபெற்ற சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த திங்கட் கிழமை திருடன் ஒருவன் கொள்ளையடிக்க வந்துள்ளான். வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்த அவன் வீட்டில் இருந்த திண்பண்டங்களை சாப்பிட்டுள்ளான்.


பின்னர் உண்ட மயக்கத்தில் அங்கேயே தூங்கி விட்டான். திருடன் வீட்டில் இருப்பதை அறிந்த உரிமையாளர் உடனே காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து வந்த போலீசார் திருடனை கைது செய்தனர்.

திருடன் விழித்து பார்த்த போது கையில் இருந்த விலங்கை கண்டு அதிர்ச்சியடைந்தான். அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர். பலரும் இந்த சம்பவத்திற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொள்ளையடிக்க வந்த வீட்டில் இருந்த பண்டங்களை சாப்பிட்டு விட்டு தூங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.