Header Ads

அமெரிக்க கப்பல் படை திடீரென வட கொரியக் கடலை ஆக்கிரமித்துள்ளது- ரம்பின் முழு பாதுகாப்பு



அமெரிக்காவின் அதி நவீன விமானம் தாங்கிக் கப்பல்கள், மற்றும் தாக்குதல் கப்பல்கள் திடீரென வட கொரியக் கடலை சுற்றிவளைத்துள்ளது என அறியப்படுகிறது. இச்சம்பவம் நேற்று இடம்பெற்ற போதிலும். இன்றுவரை முற்றுகை அகற்றப்படவில்லை. வட கொரிய கடல் எல்லைக்கு சற்று தொலைவில் இந்த நாசகாரக் கப்பல்கள் இன்னும் நிலைகொண்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

அமெரிக்க அதிபர் டொனால் ரம் , நேற்றைய தினம் தென் கொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதன் தலை நகரைச் சென்றடைந்தார். இன் நிலையில் அவர் செல்லும் ஹெலிகொப்டரை அல்லது அவர் நிற்க்கும் இடத்தை வட கொரியா ஏவுகணை கொண்டு தாக்கலாம் என்ற அச்சம் நிலவியது. இதனால் கடந்த 2 தினங்களுக்கு முன்னரே அட்டலாந்திக் கடலில் நிலை கொண்டு இருந்த அமெரிக்க நாசகார போர் கப்பல்கள் வட கொரிய தீப கற்பத்தை நோக்கி நகர்த்தப்பட்டு. அமெரிக்க அதிபருக்கு முழு அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளார்கள்.

டொனால் ரம் தென் கொரியாவில் இருந்தவேளை, வட கொரியா எந்த ஒரு சேட்டையிலும் ஈடுபடவில்லை. அவர்கள் ஒரு ஏவுகணையைக் கூட பரீட்ச்சித்துப் பார்க்கவில்லை. அப்படி அவர்கள் ஏதாவது அபத்தமான செயலில் இறங்கி இருந்தால், உடனே அமெரிக்க போர் கப்பல்கள் அந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்தி இருக்கும். அத்தோடு வட கொரியா மீது உடனே தாக்குதலையும் தொடுத்திருக்கும். இதற்கான கட்டளையை ஏற்கனவே ரம் வெளியிட்டு இருந்தார். இன் நிலை டொனால் ரம் தென் கொரியாவில் இருந்து புறப்பட்டு விட்டார். இருப்பினும் அமெரிக்க கப்பல்கள் அங்கே தங்கி நிற்கிறது.

அவர்கள் வட கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளோடு இணைந்து, போர் கால பயிற்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்று ராயிட்டர்ஸ் செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.




No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.