என் மகன் அரசியலுக்கு வர வேண்டும் விஜயின் அப்பா பரபரப்பு பேச்சு!
நடிகர் விஜய் விரைவில் நல்ல ஒரு தலைவராக உருவெடுக்க வேண்டும் என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் படம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
மெர்சல் படத்திற்கும், நடிகர் விஜய்க்கும் எதிராக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வரும் அதே வேளையில் பொதுமக்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், விஜய் விரைவில் ஒரு நல்ல தலைவராக உருவாகி, தன்னை நம்பி உள்ளவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய்யின் கோவத்தின் வெளிப்படே “மெர்சல்” என்றும், விஜய்க்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்றும் எஸ்.ஏ சந்திரசேகர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்