காதலியை கட்டுக்குள் வைத்து கல்லாலே அடித்து கொலை பண்ணிய காதலன் - காரணம்?
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ரிஸ்வான். திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரை கடந்த 16ம் தேதி முதல் காணவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிரசாந்த் என்பவரை ரிஸ்வான் காதலித்து வந்துள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது ரிஸ்வான் மலை முகட்டில் இருந்து கால் தவறி விழுந்து இறந்ததாக கூறினார்.
ஆனால் ரிஸ்வான் உடலில் உடைகள் இல்லாததும், மேலும் காயங்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது வனப்பகுதிக்கு ரிஸ்வானை அழைத்து சென்ற பிரசாந்த் காதலியை கல்லால் தாக்கி கொலை செய்தார்.
பின்னர் அதனை மறைக்க கல்லால் உடலை மூடி மறைத்ததும் தெரியவந்துது. இதனை தொடர்ந்து பிரசாந்தை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்