Header Ads

அக்கா தங்கை இருவரும் விஷம் குடித்து தற்கொலை - காரணம் தந்தையின் வெறி

தினமும் குடிபோதையில் வந்து தகராறு செய்வதால் அக்கா- தங்கை இருவரும் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கடலூரை சேர்ந்த குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கணேசன், விவசாயியான இவருக்கு திவ்யா(22), தீபிகா(18), திரேஷா(15) மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தினமும் குடித்துவிட்டு வரும் கணேசன் தகராறு செய்துள்ளார், இதனால் மூவரும் மனவேதனையில் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் கணேசன் குடித்துவிட்டு வந்துள்ளார், இரவில் அனைவரும் உறங்கிய நிலையில் நள்ளிரவில் திரேஷா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து அருந்தியுள்ளார்.

காலையில் எழுந்து பார்த்த போது மயக்க நிலையில் திரேஷாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தங்கை இறந்த தகவல் தெரிந்ததும் திவ்யாவும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள தூக்கணாம்பாக்கம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.