Header Ads

கணவரின் நடிப்பாசையை போக்க, படம் எடுக்கும் அறந்தாங்கி நிஷா…!!

கலக்கப்போது யாரு நிகழ்ச்சியில் உண்மையிலேயே கலக்கியவர் அறந்தாங்கி நிஷா.
வடிவேலு, கவுண்டமணி, சந்தானத்தை போன்று பார்த்த உடனேயே அறந்தாங்கி நிஷாவையும் பார்த்த உடனேயே சிரிப்பு வந்து விடுகிறது. அந்த அளவுக்கு அவருக்கு காமெடியாக ஒரு முகவெட்டு அமைந்துள்ளது.
அதற்கு ஏற்றார்போல சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. விஜய் டிவியிலும் தொடர்ந்து காமெடி ஷோக்களை செய்து வருகிறார்.
இவரது கணவர் பெயர் ரியாஸ். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
மனைவி நிஷா சினிமாவில் நடித்து வருவதால் கணவர் நிஷாவுக்கும் நடிக்கும் ஆசை வந்துள்ளது.
இதனை நிறைவேற்ற நிஷா குறும்படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இது முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டது. நிஷா ஏற்கனவே கரீம் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.