Header Ads

அழகில்லா பெண்களுக்கு வரதட்சணை உதவுமாம்..! இது என்னடா புதிய சர்ச்சை.?

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியின் பாட புத்தகத்தில் வரதட்சணை நடைமுறையை பாராட்டி வாசங்கள் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்தஸ்தை உயர்த்தும் வரதட்சணை


பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் பாட புத்தகத்தில் கூறியிருப்பதாவது: அழகில்லாத பெண்களை திருமணம் செய்ய ஆண்கள் விரும்புவதில்லை. எனவே, அப்படிப்பட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கவும், வாழ்க்கை துணைவர் கிடைக்கவும் வரதட்சணை உதவுகிறது.

ஒரு பெண்ணின் அந்தஸ்தை வரதட்சணை உயர்த்துகிறது. ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆண், வரதட்சணை மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மேல் படிப்பை தொடர முடியும். சொத்தில் ஒரு பகுதியை கொடுப்பதை விட, வரதட்சணையாக சிறிதளவு பணம் கொடுப்பது சரியே.


இவ்வாறு அந்த பாட புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து கல்லூரியின் பி.ஆர்.ஓ.,வான பேராசிரியர் கிரன் ஜீவனிடம் கேட்ட போது, '' இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்னையின் பின்னணியில் யார் இருந்தனர் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றார். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.