Header Ads

வடகொரியாதான் கெத்து! அமெரிக்கா வெறும் வெத்து! அமெரிக்காவின் உண்மை நிலவரம் அம்பலம்!

வல்லரசு நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ள வடகொரியாவை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் உறுதியான திட்டங்கள் ஏதும் இல்லை என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தொடர் ஏவுகணை சோதனை, ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை, அமெரிக்க ஜனாதிபதியுடன் வார்த்தை மோதல் என சமீப காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் வுன் மிக பிரபலமடைந்து வருகிறார்.

இன்னொருபக்கம் உலக நாடுகளுக்கு வடகொரியா அச்சுறுத்தல் எனக் கூறி அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஆதரவுடன் தென் கொரியா அல்லது அமெரிக்காவே முன்னின்று வடகொரியா மீது போர் தொடுக்கும் நிலை ஏற்படலாம் என உலக அரங்கில் அச்சம் எழுந்துள்ள நிலையில்,

நிபுணர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் அமெரிக்க அரசுக்கு எதிராகவே அமைந்துள்ளது.

அமெரிக்காவை கடுமையாக எதிர்த்துவரும் வடகொரியாவை எதிர்கொள்ள அந்த நாட்டிடம் ஒத்திசைவான திட்டம் ஏதும் இல்லை என்றும், வடகொரியாவின் ஆயுத பலம் குறித்த புரிதல் கூட அமெரிக்க அதிகாரிகளிடம் இல்லை என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை, பிரித்தானியாவின் முக்கிய நகரம் வரை, ஜப்பானின் இரண்டாவது பெரிய நகரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை பலம் கொண்ட ஒரு நாட்டினை எதிர்கொள்ள திட்டமே வகுக்காமல் ஒரு வல்லரசு நாடு போருக்கு ஆயத்தமாவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா தமது அணுகுண்டு வீசும் விமானங்களை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் கசிந்ததை அடுத்தே நிபுணர்கள் தங்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் அணுகுண்டு வீசும் விமானங்களை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதே அமெரிக்காவிடம் போதிய திட்டம் உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக கூறிய ராணுவ அதிகாரி ஒருவர்,

போர் துவங்கிய பின்னர் சில நாட்களின் அவகாசத்தில் மொத்த வடகொரியாவையும் அமெரிக்காவிடம் அடிபணிய வைக்கும் திறமை தங்கள் ராணுவத்திடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.