சற்றுமுன் புத்தளம் – சிலாபம் வீதியில் கோர விபத்து
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் அம்பளவெளிப் பகுதியிலுள்ள வளைவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 அளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், கார் அதிக சேதத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்