ஏவுகணைகளை தொடர்ந்து தயாரிப்போம்; சொன்னது யார் தெரியுமா..?
ரகானி கூறுகையில், ‘‘எங்களது நாட்டின் பாதுகாப்புக்காக ஏவுகணை தயாரிக்கிறோம். இதில் சர்வதேச விதிமுறைகளை எந்த வகையிலும் நாங்கள் மீறவில்லை. நாங்கள் ஏவுகணைகளை தயாரித்து இருக்கிறோம். தயாரித்தும் வருகிறோம். எதிர்காலத்திலும் ஏவுகணைகளை தொடர்ந்து தயாரிப்போம்.
சர்வதேச அளவில் ஒப்பு கொண்டுள்ள விதிமுறைகளில் எதையும் மீறாமல் நாங்கள் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.
அண்மை காலமாக வடகொரியா அடுத்தடுத்து பல்வேறு ரக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் அதற்கு ஐ.நா.வும், அமெரிக்காவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை கண்டிக்கும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியாவுக்கு கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்து உள்ளது. ஈரானுக்கும் இத்தகைய தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஈரான் அதிபர் இந்த விளக்கத்தை அளித்துள்ளதாக கருதப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்