Header Ads

பால் குடிக்கவில்லை என்று வெளியே விட்ட அப்பா: சிறுமி உடல் தான் மீட்ப்பு: கேரளகாரன் கொடுமை



கேரளாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் இருந்து, ஷெரின் என்னும் சிறுமியை தத்தெடுத்துள்ளார் மத்தியூஸ் என்னும் நபர். இவரும் கேரளாவை சேர்ந்தவர். பின்னர் அவர் அமெரிக்கா டெக்ஸஸ் மாநிலத்திற்கு தன் மனைவியோடும் வளர்ப்பு மகளோடும் சென்று வேலை பார்த்து வந்தார். ஷெரினுக்கு 3 வயது.  ஷெரினுக்கு பேச்சுத் திறமையிலும், வளர்ச்சியிலும் சில குறைகள் இருந்தன. அக்டோபர் 7ம் திகதி அவர் பாலை முழுமையாக குடிக்கவில்லை என்று கூறி, 3 வயது சிறுமி என்று கூட பாராமல் அவரை வீட்டுக்கு வெளியே உள்ள மரம் ஒன்றின் கீழ் நிற்க்குமாறு வளர்ப்பு தந்தை தண்டனை கொடுத்துள்ளார்.

4 மணி நேரம் கழித்து சிறுமியை சென்று பார்த்த மத்தியூஸ். அவர் அங்கே இல்லை என்று கூறி பொலிசாருக்கு அழைப்பை விடுத்தார். கடந்த பல நாட்களாக சிறுமியை தேடி வந்த டெக்ஸஸ் பொலிசார். பின்னர் அரை மைல் தொலைவில் , ஒரு பலத்திற்கு அருகாமையில் சிறுமி ஒருவரின் உடல் இருப்பதை அறிந்து அங்கே சென்றால். அது  ஷெரின் உடல் எனக் கண்டு பிடித்துள்ளார்கள். உடனே வளர்ப்பு தந்தையை அவர்கள் கைதுசெய்த போதும் சுமார் 2 லட்சம் டாலர்கள் பிணையாக கட்டி ஜாமினில் அவர் வெளியே வந்துள்ளார்.

அந்த தெருவில் காட்டு நாய்களும், ஓநாய்களும் வரும் என்பது தனக்கு தெரியும் என அவர் ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இரவு 3.00 மணிக்கு வாய் பேசாத இச் சிறுமியை வீட்டுக்கு வெளிவே விட்டு அவரைக் கொடூரமாக கொலைசெய்துள்ளார் இன் நபர். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.