Header Ads

மாற்றுத்திறனாளி மனைவியை நெருப்பு வைத்து கொளுத்திய கணவன் - காரணம் என்ன தெரியுமா?

குடும்ப தகராறு காரணமாக மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சென்னையை அடுத்த ஆலந்தூரை சேர்ந்தவர் ஏழுமலை(50), இவரது மனைவி மஞ்சுளா(45). இவர் மாற்றுத்திறனாளி ஆவார், தம்பதிக்கு விக்னேஷ்(18) என்ற மகன் உள்ளார்.

குடிப்பழக்கம் கொண்ட ஏழுமலை தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை விக்னேஷ் வேலைக்கு சென்று விட்டார், மஞ்சுளா சமையல் அறையில் கீழே அமர்ந்து பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தார்.

அப்போது ஏழுமலை திடீரென பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து மஞ்சுளா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதையடுத்து மஞ்சுளா சத்தம் போட தப்பியோட முயன்ற ஏழுமலையை அக்கம்பக்கத்தினர் விரட்டி பிடித்தனர்.

பின்னர் தீயில் கருகிய மஞ்சுளா காப்பாற்றப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது ஏழுமலையை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.