Header Ads

மகள் திருமண வீட்டுக்கு கூப்புடவில்லை! தந்தை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


துருக்கியில் தந்தை ஒருவர் தமது மகளின் திருமணத்திற்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் 54 வயதான Ayhan Uzun என்பவரே பேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்னர் தமது குடும்பத்தினர் குறித்து நீண்ட நேரம் பேசிய அவர், எனது தற்கொலைக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக எனது இறுதிச்சடங்கிலும் பங்குபெற வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து துப்பாக்கியை தனது தலையில் வைத்து அழுத்தி, சென்று வருகிறேன், உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் எனக் கூறிக் கொண்டே உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தின்போது Uzun தனியாகவே தமது குடியிருப்பில் இருந்துள்ளார். தமது மகளின் திருமணம் குறித்து அவரது குடும்பத்தினர் தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு மகளின் வாழ்க்கையில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வு. அதை அவர்கள் தொலைபேசியில் அழைத்து தெரிவித்துள்ளதுடன், வந்து விருந்துண்டு செல்லுங்கள் என்கிறார்கள் என வருத்தமுடன் அந்த நேரலையில் தெரிவித்துள்ளார்.

மகளின் திருமணம் குறித்து எவரும் தம்மிடம் ஆலோசனை கேட்கவில்லை எனக் கூறும் அவர், எவரும் தம்மை ஒரு மனிதனாகவே மதிக்கவில்லை என்றார்.

தொலைபேசியில் அழைத்து தெரிவிக்கும் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன் என திருப்பிக் கேட்டதற்கு, நேரில் வந்து சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை என தமது குடும்பத்தினர் பதிலளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


பேஸ்புக் நேரலையில் பேசுவதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்ததுடன், தற்கொலைக்கு முயல வேண்டாம் எனவும் கெஞ்சிக் கேட்டுள்ளனர்.

இதனிடையே அவரது குடும்பத்தினர் சிலர் Uzun தங்கியிருந்த வீட்டுக்கு விரைந்ததுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்தனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.