திருமணம் எப்போது.? ராகுல் அளித்த பதில் என்ன தெரியுமா.?
புதுடில்லி : டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்., துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்டு பேசினார். பிறகு பார்வையாளர்கள் பலரின் கேள்விகளுக்கும் ராகுல் பதிலளித்தார்.
அப்போது குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுலிடம் 2 கேள்விகள் கேட்டார். விஜேந்தர் பேசுகையில், மக்கள் எப்போதும் கேட்கும் பழைய கேள்வி தான். ராகுல் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்? இதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஒருவேளை பிரதமர் ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளீர்களா என்றார்.
இதற்கு பதிலளித்த ராகுல், அது எப்போது நடக்க வேண்டுமோ அப்பொழுது நடக்கும். நான் விதியை நம்புகிறவன் என கூறிவிட்டு, சிரித்தபடி நகர்ந்து விட்டார். முன்னதாக பேசிய ராகுல், ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அமல் இரண்டும் மக்களின் மார்பில் செலுத்தப்பட்ட இரண்டு குண்டுகள். அனைத்து பணமும் கருப்பு பணம் அல்ல என தெரிவித்தார்.

சுயவிளம்பரம் தேடாதவன்
டில்லியில் வர்த்தக சபை (PHD Chamber of Commerce) வருடாந்திர கூட்டத்தில் ராகுல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ராகுலிடம் கேள்வி கேட்டார். அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் விளையாட்டிற்கு போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லையே என்று கேட்டார்.
அதற்கு ராகுல், என்னை அவ்வாறு நினைத்துவிடாதீர்கள். நான் தினமும் நீச்சல், ஓட்டப்பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்கிறேன். எனக்கு விளையாடுவது என்பது மிகவும் பிடித்தமான விசயம். தினமும் விளையாட்டிற்கென குறைந்தது 1 மணிநேரம் செலவிடுகிறேன். ஜப்பானிய தற்காப்பு கலையான அய்கிடோவில் நான் கறுப்பு பெல்ட் வாங்கியுள்ளேன். நான் இது வாங்கியுள்ளேன், அது செய்துள்ளேன் என்று சுயவிளம்பரம் செய்துகொள்வது தனக்கு பிடிக்காத ஒன்று என்று ராகுல் கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை வரவேற்கிறீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில், காங்கிரஸ் கட்சியில், இளைஞர்கள் தான் வியாபித்திருப்பார்கள். அவர்கள் இளைஞர்கள் என்றாலும் அனுபவசாலிகள் என்று ராகுல் கூறினார்

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்