Header Ads

சசிகலாவுக்கு பரோல் கிடைக்காமல் போக காரணம் யார்.! உண்மையை அம்பலமாக்கியது கர்நாடக போலீஸ்..!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரில் உள்ள சிறையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் உடல் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பார்ப்பதற்காக சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வரவதற்காக மனு கொடுத்தார். அவர் அளித்த அந்த மனுவில் போதியமான தகவல்கள் இல்லை என் அவரது மனுவை சிறைத்துறையினர் நிராகித்தனர். 

சசிகலா பரோலில் வெளியே வந்தால அதிமுகாவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்படும் என கருதி தமிழக அரசு அவரை தடுத்ததாக தகவல் வந்தன. 

இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக சிறைத் துறை கண்காணிப்பாளர் சோமசேகர் கூறியதாவது: சசிகலா சிறையிலிருந்து பரோலில் வெளியே வருவதற்கு தங்களுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை . ஆனால் சசிகலா வெளியே வரவேண்டும் என்றால் சென்னை காவல் துறையினர் எங்களுக்கு தடையில்லா சாண்றிதழ் அளிக்க வேண்டும். 


ஆனால் இதுவரை எங்களிடம் சென்னை காவல்துறையினர் சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை. இதனால் தான் சசிகாலாவால் பரோலில் வெளியே வரமுடியவில்லை. சென்னை காவல் துறையிலிருந்து தடையில்லா சான்றிதழ் வழங்கினால் மட்டுமே சசிகலாவின் பரோல் மனு மீது நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு கர்நாடக சிறைத் துறை கண்காணிப்பாளர் சோமசேகர் கூறினார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.