Header Ads

ரயிலை திசை­தி­ருப்ப முயற்­சித்த, மன்னார் மாண­வ­னுக்கு நடந்த விபரீதம்.!

தலை­மன்­னா­ரி­லி­ருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் ரயிலை திசை­தி­ருப்பி அபா­யத்தை ஏற்­ப­டுத்த முயன்­ற­தாக தெரி­வித்து பாட­சாலை மாணவன் ஒருவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். இச் சம்­ப வம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பேசாலை பகு­தியில் இடம்­பெற்­றது.
தலை­மன்னார் பிய­ரி­லி­ருந்து கொழும்பு நோக்கி  சென்ற தபால் ரயில் இரவு 9.45 மணிக்கு பேசாலை ரயில்வே நிலை­யத்தை வந்­த­டைந்­ததும் ரயில் ஓடும் சரி­யான பாதையை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை ரயில்வே நிலையம் முயற்­சித்­த­போது அது பய­ன­ளிக்­கா­மையால் அதி­கா­ரிகள்  ரயில்வே நிலை­யத்­தி­லி­ருந்து 300 மீற்றர் தூரத்­தி­லுள்ள தண்­ட­வா­ளங்­களை இணைக்கும் இடத்­துக்குச் சென்று பரி­சோ­தித்­துள்­ளனர். அப்போது தண்­ட­வா­ளங்­களை இணைக்கும் இடை­வெ­ளியில் இரு கற்­களை வைத்து இரு பாதை­களை இணைக்க முடி­யா­த­வாறு செயற்­பட்­டி­ருந்­தமை கண்­டுபி­டிக்­கப்­பட்­டது.
இது விட­ய­மாக பேசாலை ரயில்வே அதி­கா­ரி­யினால் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஏ.ஆர்.சிறில் தலை­மை­யி­லான பொலிஸார் உட­ன­டி­யாக சம்­பவ இடத்­துக்குச் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.
அப்­ப­கு­தியால் தனியார் வகுப்­புக்குச் சென்­று­வரும் ஒரு பிர­பல பாட­சா­லையைச் சேர்ந்த உயர் கல்வி கற்கும் மாணவர் ஒரு­வரால் இச்­செ­யற்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டமை தெரி­ய­வந்­துள்­ளது.
இது தொடர்­பாக சந்­தேகநப­ரான மாண வன் கைது செய்யப்பட்டு மன்னார் மாவ ட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆ.கி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படு த்தியபோது இம் மாணவனை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.