ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் திடீர் மயக்கம்: நடந்தது என்ன?
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் வித்தியாசமான வாயு வந்ததாகவும், இதை முகர்ந்த காரணத்தினாலேயே தமக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் பஸ்களிலும், அம்பியூலன்ஸ் வண்டிகளிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மேலும் இது குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்