சிரியாவில் ராணுவம் மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே கடும் மோதல்; 73 பேர் பலி..!
சிரியாவில் உள்ள டெயிர் எஸ்ஸார் நகரத்தினை ராணுவம் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்நகரை இலக்காக கொண்டு நேற்று தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து சிரிய ராணுவ படைகளும் பதில் தாக்குதல் நடத்தின. இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக இயக்குநர் அப்துல் ரஹ்மான் இன்று கூறும்பொழுது, ஐ.எஸ். அமைப்பு ஆனது சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த 24 மணிநேரத்தில் நடந்த கடும் சண்டையில் ஐ.எஸ். போராளிகள் 50 பேர் பலியாகியுள்ளனர். இதேபோன்று 23 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு டெயிர் எஸ்ஸார் நகரின் பெரும் பகுதிகளை ஐ.எஸ். அமைப்பு தனது கட்டுக்குள் வைத்திருந்தது. கடந்த 3 வருடங்களாக அதனை சுற்றிய அரசின் கட்டுக்குள் உள்ள பிற பகுதிகளையும் முற்றுகையிட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பரில், இந்த முற்றுகையை முறியடித்து நகரின் பிற பகுதிகளில் இருந்தும் ஜிகாதிகளை வெளியேற்றும் பணியில் சிரிய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்