Header Ads

நாய் குட்டியை விட்டுவைக்காமல் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடூரன்!!

இந்தியா - டெல்லியில் நபர் ஒருவரால் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நாய் குட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள நாராயணா எனும் பகுதியில் வசித்துவரும் நரேஷ் குமார் (34) என்பர் நாய் குட்டி ஒன்றை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விலங்கின ஆர்வலரான அபிஷேக் வழக்கு பதிவு செய்துள்ளார். 


பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் நாய் குட்டியின் பிறப்புறுப்பில் ரத்தம் வடிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நரேஷின் மனைவி ‘என்னுடைய கணவர் என்னிடமும் இவ்வாறு கொடூரமாக நடந்துகொள்வது வழக்கமானது’ என தெரிவித்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான நரேஷ் சமீத்தில் மனைவியுடன் நடந்த சண்டையில் அவருடைய கையை உடைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இந்த சம்பவம் கடந்த 25ம் திகதி நடைபெற்றுள்ளது. கார் டிரைவராக உள்ள நரேஷ் குமார் குடிபோதையில் நாய் குட்டி ஜென்னியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த நாய்குட்டியை சாக்கு பையில் கட்டி அருகில் உள்ள குப்பை மேடு ஒன்றில் வீசியுள்ளார். நாய் குட்டியை பாலியல் வன்புணர்வு செய்த நரேஷ், நடந்தவற்றை குடிபோதையில் அவரது நண்பர்களிடம் உளறியுள்ளார். 


இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் விலங்கின ஆர்வலரான அபிஷேக், நாய் குட்டியை காணாமல் அருகில் இருக்கும் நபர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் நரேஷ் குமார், நாய் குட்டியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து நாய் குட்டியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அபிஷேக், நரேஷ் குமார் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.