ஹைட்ரஜன் குண்டை வெடித்த வட கொரியா: அமெரிக்கா பொத்திக் கொண்டு இரு என்கிறார் கிம்
சற்று முன்னர் வட கொரியாவில் 6.3 ரிக்டர் அளவு, அதி பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடுகள் பல இதனை உணர்ந்துள்ள நிலையில். அது இயற்கையான நில நடுக்கம் இல்லை என்பதனை வட கொரியா உறுதிசெய்துள்ளது. அணு குண்டை விட மிகவும் சக்தி வாய்ந்த, ஹைட்ரஜன் குண்டை வடகொரியா பரிசோதனை செய்து பார்த்துள்ளது என்பதனை அமெரிக்கா உட்பட , சீனாவும் உறுதிசெய்துள்ளதோடு. கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. காரணம் என்னவென்றால், இதுவரை காலமும் வட கொரியாவிடம், அணு குண்டு உள்ளது என்று தான் பல நாடுகள் அதனை பார்த்து அச்சமடைந்தார்கள்.
ஆனால் தற்போது வடகொரியாவிடம் ஹைட்ரஜன் குண்டு உள்ளது என்று தெரியவந்துள்ளது. பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அதுபோக இந்த ஹைட்ரஜன் குண்டை தாங்கிச் செல்லும் ஏவுகணையும் தயார் என்கிறது வட கொரியா. இதனால் கடும் அதிர்சியடைந்துள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா , ஜபான் முதலான நாடுகள் அடங்கும்.
அடுத்தது என்ன என்று , பல நாடுகள் தற்போது ஆராய்ந்து வருகிறது.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்