Header Ads

ஜெகத் ஜெயசூரியா தப்ப உதவி செய்தது தமிழர்களா ? அதிர்சியைக் கிளப்பும் உள்ளக தகவல்




பிரேசிலுக்கான இலங்கை தூதுவரும், பல போர் குற்றங்களை புரிந்தவருமான ஜெகத் ஜெயசூரியா அன் நாட்டில் இருந்து தப்பி டுபாய் ஊடாக இலங்கை சென்ற விடையம் பலர் அறிந்திருப்பீர்கள். ஆனால் அறியாத விடையம் சில உள்ளது. இதோ அதிர்வின் வாசகர்களுக்காக சில உள்ளக செய்திகளை நாம் தருகிறோம்.. 

சட்டிக்குள்ளே நண்டை விட்டால், (தமிழ் நண்டை) அது ஒரு நண்டைக் கூட ஏறி கரைசேர விட்டாது. காலை இழுத்து கரை சேர நினைக்கும் நண்டை மீண்டும் சட்டிக்குள் தான் விழுத்துமாம். இது போல தமிழர்களுக்கு வேறு யாரும் எதிரி அல்ல, தமிழர்கள் தான். பிரேசிலில் தங்கியிருந்த ஜெகத் ஜெயசூரியாவுக்கு எதிராக மிகவும் ரகசியமான முறையில் தான் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அன்று இரவே அவர் தப்பிச் சென்றுள்ளார். நீதிமன்ற எந்த ஒரு பிடியாணையையும் அனுப்பவில்லை. எந்த ஒரு தகவலையும், ஜெகத் ஜெயசூரியாவுக்கு கொடுக்கவும் இல்லை. ஆனால் வழக்கு தொடர்பான விடையத்தை அவர் எப்படி சில மணி நேரங்களில் அறிந்து கொண்டார் ? இது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட ஒரு நபர், இலங்கை அரசுக்கு தகவலை பரிமாறினால் மட்டுமே இது தெரியவந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக வழக்கை மிகவும் கஷ்டப்பட்டு தொடுத்த நபர்கள் கூறுகிறார்கள். என்ன கொடுமை ? சேர்ந்திருந்து வேலை செய்வது போல வேலை செய்துவிட்டு. இறுதியாக யாரோ தகவலை ஜெகத்திற்கு சொல்லியும் உள்ளார்கள். வழக்கு போடப்பட்டு சில மணி நேரங்களில், அவர் நேரடியாக டுபாய் சென்றுள்ளார். பொதுவாக பிரேசில் நாட்டில் இருந்து லண்டன், ஜெனீவா, அல்லது அமெரிக்கா சென்று தான் விமானங்கள் அங்கிருந்து ஆசிய நாடுகள் செல்வது வழக்கம். அப்படி எந்த ஒரு நாட்டுக்கும் செல்லாமல். இலங்கைக்கு மிக வேண்டப்பட்ட நாடான டுபாய் சென்று அங்கிருந்து பாதுகாப்பாக அவர் கொழும்பு சென்றுள்ளார்.

இந்த திட்டத்தை கூட தமிழர் ஒருவர் தான் வகுத்திருக்கவேண்டும் என்கிறார்கள் வழக்கை தொடுத்த நபர்கள். ஏன் எனில் அமெரிக்காவில் இவருக்கு எதிராக வழக்கு உண்டு. அதுபோல லண்டனிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இதுபோன்ற நாடுகளுக்கு அவர் செல்லாமல் தவிர்த்திருக்கிறார். ஏன் எமது தமிழ் இனம் இப்படி இருக்கிறது ? தமிழர்களுக்கு உதவ வேற்று இனத்தவர்கள் பாடுபடுகிறார்கள். நேரகாலம் பார்க்காது வேலைசெய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கூட தமிழர்கள் நண்றியுடையவர்களா இருப்பது இல்லை. இதுபோக , இந்த வழக்கை தாமே போட்டு வென்றதாக வேறு சில அமைப்புகள் உரிமை கொண்டாடுவது அதனை விடக் கொடுமையான விடையம். லண்டனில் உட்கார்ந்து வடையும் கோப்பியும் குடித்து கும்மாளம் போடும் இந்த அமைப்புகள், வேறு யாராவது ஒரு வேலைத்திட்டத்தை செய்தால் உடனே தான் தான் செய்ததாக மக்கள் மத்தியில் கூறிவிடும்.

உண்மையில் பிரேசில் நாட்டில் வழக்கை தொடர்ந்த அமைப்பு, "உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு" (ITJP)  International Truth and Justice Project என்னும் ஒரு அமைப்பு தான். இதில் ஜாஸ்மின் சூக்கா, பிரான்சிஸ் ஹரிசன் போன்ற நபர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இவர்களே முழு உரித்துடையவர்கள்.  http://www.itjpsl.com


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.