போர் முடிந்தாலும் குண்டுகள் இன்னும் முடியவில்லை! அதிரும் தகவல்.
இரண்டாம் உலகப்போரின்போது பாவிக்கப்பட்டு, வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்ட குண்டு ஒன்றை ஜப்பான் கடலில் வெடிக்கச் செய்தது.
ஜப்பானின் அக்கினாவா என்ற பகுதியில் துறைமுகம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது,
இரண்டாம் உலகப்போரின்போது பாவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குண்டுகள் பலவற்றையும் ஜப்பான் கண்டுபிடித்தது.
இந்த குண்டுகளைச் செயலிழக்கச் செய்ய முடியாது என்பதால், அவற்றைப் பாதுகாப்பாக வெடிக்கவைக்கும் முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது. இதுவரை 103 குண்டுகளை வெடிக்கவும் செய்துள்ளது.
இது தவிர இன்னும் இரண்டாயிரம் தொன் குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை வெடிக்க வைத்து அழிப்பதற்கு இன்னும் எழுபது வருடங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்