Header Ads

8ஆம் ஆண்டு மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞன்!!

13 வயது பாடாசலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 23 வயதான திருமணமான இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளையில் பிரபல பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவியின் விருப்பத்துடனேயே அவருடன் உறவு கொண்டதாக சந்தேக நபர் காவல்துறையில் தெரிவித்துள்ளார். 


இவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக உறவு இருந்து வந்துள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மாணவியிடம் அளவுக்கு அதிகமாக பணம் புழங்கியுள்ள நிலையில், பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 


இதனை தொடர்ந்து மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னரே இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. பின்னர் பெற்றோர் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நாவுல – வம்பட்டுயாய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர், நாவுல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.