புலிகளுக்கு ஆதரவு என தெரிவித்து, சுவிஸ் தமிழரின் கட்டடத்தை மகிந்த ராஜபக்ஷ பறித்தது செல்லாது என தீர்ப்பு
தமிழீழ விடுதலை புலிகள்(பெண் போராளிகள்) அமைப்பின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தை பறிமுதல் செய்தார் மகிந்த. பின்னர் அவர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், இந்த வழக்கை நிலுவையில் போட்டார். பின்னர் என்ன நடந்திருக்கும் என்று நாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. பின்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இக் கட்டத்தை எடுத்து. அங்கே இயங்கி வந்தார்கள்.
இன் நிலையில் ரணில் ஆட்சிக்கு வந்தபின்னர். சுவிஸ் வாழ் தமிழர், இலங்கை உச்ச நீதிமன்றில் வழக்கை தொடுத்தார். வழக்கு பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. சுவிசில் வசித்து வரும் சண்முகம் சிவராஜா மற்றும் சிவராஜா சரோஜினி தம்பதிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் , பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் 2 வாரங்களில் அங்கிருந்து விலகவேண்டும் என்றும். மகிந்த கட்டத்தை பறித்தது செல்லுபடியாகாது என்றும் அறிவித்துள்ளது.
தங்களுக்கு சொந்தமான இந்த கட்டடத்தை விடுதலை புலிகளுக்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி வாங்கியதாகவும் அங்கு விடுதலை புலிகளுக்கு உதவும் மருத்துவமனையை நடத்தியதாக குற்றஞ்சாட்டி பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணையை ஆரம்பித்ததாக மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். மனுவை ஆராய்ந்த நீதிபதிகள் அவசாரகால சட்டத்தின் கீழ் இந்த கட்டிடத்தை பறிமுதல் செய்யும் அளவிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளனர். மகிந்த வளைத்து போட்ட தமிழர்களது பல நூறு கட்டங்களில் இதுவும் ஒன்று.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்