ஜப்பான் நாட்டின் மூக்கில் விரலை விட்டு ஆட்டிய வடகொரியா!! ஏவுகணையை தெரிக்கவிட்டுள்ளது!!
தமது நாட்டுக்கு மேலாக ஏவுகணை செலுத்தியமை தொடர்பில் வடகொரியாவுக்கு ஜப்பான் கண்டனம் வெளியிட்டுள்ளது.
வடகொரியா நேற்று செலுத்திய ஏவுகணை கடலில் வீழ்வதற்கு முன்னதாக ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேலாக சென்றது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல் என்றும் ஜப்பான் பிரதமர் ஸின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை தமது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அது பெரும் பாதிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டமொன்றை நடத்த எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்