Header Ads

சீனப்பெரும் சுவரே பெரிய அதிசயம்! அதற்க்கு கீழ் உண்டான இன்னொரு அதிசயம்

சீனாவில் அதிவேக ரெயில் சேவைக்கான ரெயில் பாதையின் ஒரு பகுதி, சீனப்பெருஞ்சுவருக்கு அடியில் 12 கி.மீ. நீளத்திற்கு அமைய உள்ளது. இந்த சுரங்கப்ப் பாதையால் பெருங்சுவருக்கு பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் மக்கள் உள்ளனர். சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் அதிவேக ரெயில் சுரங்கப்பாதை பீஜிங்: சீனாவில் பீஜிங் மற்றும் ஷாங்ஜியாகோ நகரங்களை இணைக்கும் வகையில் 174 கி.மீ. நீளத்திற்கு அதிவேக ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 


இதன் ஒரு பகுதியானது, புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ரெயில் பாதையாக அமைய உள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2019ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


படாலிங் பகுதியில் பெருஞ்சுவருக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், படாலிங் பெருஞ்சுவர் மேற்பரப்பில் இருந்து 102 மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அதிக ஆழமான இடத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஆனால் சீனப் பெருஞ்சுவர் அருகில் சுரங்கப் பாதை அமைக்கப்படுவதால் அதற்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். 


இது குறித்து ரெயில்வே துறை துணை மேலாளர் டெய் டான்சன் கூறுகையில், ‘சுரங்கப்பாதை அமைக்க பூமிக்கு அடியில் வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெருஞ்சுவருக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுரங்கம் அமைக்கப்படுவதால் வெடிமருந்து வெடிக்கும் அதிர்வுகள் குறைந்த அளவே உணரப்படும்’ என தெரிவித்தார். இந்த ரெயில்பாதையுடன் இணையும் ஷாங்ஜியாகோ நகரில் 2022-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.