பக்கிங்காம் அரண்மனை அருகே போலீசாருக்கு கத்தி குத்து !! ஐ எஸ் தீவிரவாதிகளாக இருக்க...........
பிரிட்டனின் பங்கிங்காம் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த இரண்டு போலீசாரை கத்தியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரிட்டன்: பக்கிங்காம் அரண்மனை அருகே போலீசாருக்கு கத்தி குத்து - தீவிரவாத தாக்குதலா? என விசாரணை
லண்டன்:
பிரிட்டனின் பங்கிங்காம் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த இரண்டு போலீசாரை கத்தியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரிட்டனின் அரச குடும்பத்தினர் வசிக்கும் பங்கிங்காம் அரண்மனை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். ஐரோப்பிய நாடுகளில் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் நிலவுவதால் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை, அரண்மனையின் வெளிப்பகுதியில் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்த போலீசாரை மர்மநபர் ஒருவன் கத்தியால் தாக்கியுள்ளான்.
இந்த தாக்குதலில் இரு போலீசார் காயமடைந்துள்ளதாகவும்,
தாக்குதலை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், இது தீவிரவாத தாக்குதாலாக இருக்குமோ என்ற கேள்விகளுக்கு போலீசார் தரப்பில் பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
பிரிட்டனில் மட்டும் இந்த ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 38 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்