அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் கொத்து கொத்தாக சிறுவர்கள் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அமெரிக்க கூட்டுப்படை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் மரணித்துள்ளனர்.
சோமாலியாவில் அமெரிக்கா ஆதரவுடன் ஆட்சி இடம்பெற்றுவருகின்றது.
இந்த ஆட்சியை எதிர்த்து அல் கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு எதிராக ஆபிரிக்க யூனியனை சேர்ந்த கூட்டுப்படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோமாலிய தலைநகர் மொகடி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் பதுங்கிடம் ஒன்றில் அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்