சற்று முன்: பீச் மணலில் பிளேனை இறக்கி 2 பேரைக் கொலை செய்த பைலட்: போத்துக்கலில் பதற்றம் !
முதலில் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என தான் நினைத்தேன், என்று உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார். போத்துக்கல் நாட்டில் உள்ள புகழ்பெற்ற கடல்கரை ஒன்றில், உல்லாசப் பயணிகள் பலர் இருந்தவேளை. திடீரென சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியுள்ளது. இதனால் பயந்து போன பலர் கடலை நோக்கி ஓடியுள்ளார்கள். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானத்தை அவசரமாக தரை இறக்கிய விமானி, அதனை கடலில் இறக்காமல் கடல் கரை மணலில் இறக்கியுள்ளார்.
அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் இருந்துள்ளார்கள். இதில் விமானத்தின் முன் காத்தாடியில் வெட்டுப்பட்டு, தந்தை ஒருவரும் 8 வயது சிறுமியும் பலியாகியுள்ளார்கள். விமானத்தை அவசரமாக தரை இறக்கிய விமானி அதனை கடலில் தரை இறக்கி இருந்தால் , 2 பேரது உயிர் தப்பி இருக்கும் என்று. அங்கே கூடி நின்றவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். விமானி தன்னுடைய உயிரைக் காப்பாற்றவேண்டும் என்று எண்ணியுள்ளாரே தவிர அங்கே இருந்த பொது மக்களை பற்றி அவர் நினைதுப் பார்க்கவில்லை என்று , பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்