தமிழர் விளையாட்டு போட்டியில் தேசிய கொடியோடு நின்று உணர்ச்சியை வெளிப்படுத்திய சகோதரர் !
ஞாயிற்றுக் கிழமை(30.07.2017) அன்று நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் பல ஆயிரக்கணகான மக்கள் கலந்துகொண்டார்கள். கோலாகலமாக இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில், வித்தியாசமான மனிதர் ஒருவரையும் நாம் அவதானிக்க முடிந்தது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெறும் மைதானத்தில், புலிக்கொடி(தேசியகொடியோடு) நடமாடிய மனிதர் தான் இவர். இவர் பெயர் மொகமெட் டீன் என்று அறியப்படுகிறது.
லண்டனில் புலிக் கொடி பிடிப்பது குற்றம் என்ற வாக்குவாதம் இடம்பெற்று வருகிறது. பல தமிழ் அமைப்புகள் கூட இது தடைசெய்யப்பட்ட ஒன்று என்றும். இதனை பாவிக்க கூடாது என்றும் கூறி வருகிறார்கள். இதேவேளை லண்டனில் தேசிய கொடி பிடிப்பவர்களை, லண்டனில் இயங்கும் இலங்கை புலனாய்வுக் குழுவினர் படம் எடுத்து இலங்கை ராணுவத்திற்கு அனுப்பியும் வருகிறார்கள். இதனூடாக அன் நபர் இலங்கை சென்றால் அவருக்கு பெரும் ஆபத்து காத்துக்கொண்டு இருக்கிறது. இது பலருக்கு நடந்தும் உள்ளது.
இன் நிலையில் மிகவும் துணிச்சலாக தமிழீழ தேசிய கொடியை தாங்கி நின்ற, மொகமெட் டீன், உண்மையில் உணர்ச்சி மிக்கவர் தான்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்