Header Ads

லண்டனில் தெருவிளக்குகளில் ‘சார்ஜ்’ செய்யும் மின்சார கார்கள்! இதனால் வரப்போவது என்ன ?

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மின்சார கார்களுக்கு தேவையான மின்சாரத்தை ‘சார்ஜ்’ செய்யும் விதமாக தெருவிளக்குகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. லண்டனில் தெருவிளக்குகளில் ‘சார்ஜ்’ செய்யும் மின்சார கார்கள் லண்டன்: இங்கிலாந்து, ஜெர்மனி, உள்ளிட்ட மேலை நாடுகளில் இ-கார்கள் எனப்படும் மின் சாரத்தினால் இயங்கும் கார்கள் உள்ளன. 

அவற்றில் உள்ள கேபிள்களில் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்து கார்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தெரு விளக்குகளில் இ-கார்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை ‘சார்ஜ்’ செய்து கொள்கின்றன. அதற்கான வசதியுடன் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 


ஜெர்மனியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்ய ‘எல்இடி’ வசதியுடன் கூடிய மின் கம்பங்களை அமைத்துள்ளது. இ-கார்களில் மின்சார மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் கேபிள்களில் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்யப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.