6 வெளிநாட்டு பணயக்கைதிகள் தோன்றும் காணொளிக் ! அதிரும் வீடியோவை வெளியிட்ட மாலி தீவிரவாதிகள்
மாலியை அடிப்படையாகக் கொண்டு செயற்ப டும் அல் கொய்தா தீவிர வாதிகள் தம்மால் பணயக்கைதிகளாக பிடித்து வைக் கப்பட்டுள்ள 6 வெளிநாட்டவர்கள் தோன்றும் புதிய காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதையொட்டியே இந்தக் காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி பணயக்கைதிகளில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு ஸ்தாபனத்தின் பணியாளர், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வயோதிப சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் மற்றும் கொலம்பிய கன்னியாஸ்திரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
அவர்களை விடுதலை செய்வதற்கு உண்மையான பேச்சுவார்த்தைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என அந்தக் காணொளிக் காட்சியில் குற்றஞ்சாட்டப்பட் டுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்