Header Ads

பணம் அறவிட்டால் எனக்கு அது வேண்டாம் ! குமுறும் வாடிக்கையாளர்கள்.

பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், சேவையை தொடர வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற வதந்தி வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. வாட்ஸ்அப் சேவைக்கு பணமா? தீயாய் பரவும் வதந்தி புதுடெல்லி: வாட்ஸ்அப் செயலியில் இலவசமாக குறுந்தகவல் அனுப்பி வருபவர்களை பதற்றத்தில் ஆழ்த்தும் வகையில் வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை இலவசமாய் பயன்படுத்தியது போதும், 
தொடர்ந்து வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த பணம் செலுத்துங்கள் என்ற தகவலுடன் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் பரப்பப்பட்டு வருகிறது. துவக்கத்தில் வாட்ஸ்அப் சேவைகள் கட்டண அடிப்படையில் வழங்கப்பட்டு பின் அதுவும் செலுத்த வேண்டாம் என வாட்ஸ்அப் தெரிவித்தது. இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த வாட்ஸ்அப் சேவை, 

இனியும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் நோக்கில் புதிய வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

 வாட்ஸ்அப்பில் பரவி வரும் தகவலில் உங்களது சந்தா நிறைவுற்றது, உங்களது கணக்கினை உறுதி செய்த பின், வாழ்நாள் சந்தாவை 0.99 GBP செலுத்தி பெற்றிடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. போலி குறுந்தகவலில் இடம்பெற்றுள்ள லின்க் கொண்டு பயனர்களின் கட்டண விவரங்களை பறிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் வாட்ஸ்அப் சேவையை தொடர பணம் செலுத்த வேண்டும் என்பது போன்ற குறுந்தகவல்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டியதில்லை. வாட்ஸ்அப் இதுவரை வழங்கப்பட்டு வருவதை போன்றே இலவசமாக வழங்கப்படும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.