மோடியை பார்த்து அமெரிக்க பெண் கேட்ட கேள்வி தெரியுமா ? சிரித்துக்கொண்டே பதில் சொன்ன மோடி
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் கெல்லி, நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா என்று கேட்டது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டுவிட்டரில் இருக்கிறீர்களா? மோடியை பார்த்து கேட்ட அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர்
மாஸ்கோ:
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உடனான அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் மெகைன் கெல்லியின் சந்திப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள நிலையில்,
அங்கு இந்த சம்பவம் நடைபெற்றது.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் புதின் மற்றும் மோடியிடம் பத்திரிக்கையாளர் கெல்லி நேற்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, மோடியை பார்த்து கெல்லி நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா என்று கேட்டார்.
மோடி, பத்திரிக்கையாளர் உரையாடல் முழு விவரம்:-
மோடி: நான் உங்கள் டுவிட்டரை பார்த்தேன்
பத்திரிக்கையாளர்: அப்படியா?
மோடி: குடையுடன் இருந்தீர்கள்?
பத்திரிக்கையாளர்: என்னை டுவிட்டரில் பார்த்தீர்களா? நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா?
மோடி: ஆமாம்
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்