கேரளாவைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு கட்டார் நாட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி
கத்தார் நாட்டின் வுகைர் பகுதியில் ஓட்டலில் சாப்பிட சென்ற கேரளாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன், பாதாள சாக்கடையில் விழுந்து மரணமடைந்தான்.
கத்தார்: பாதாள சாக்கடையில் விழுந்து கேரளாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மரணம்
துபாய்:
கத்தார் நாட்டின் வுகைர் பகுதியில் வசித்து வந்தவன் அகமது பஷீர் (வயது 6). தனது பெற்றோருடன் வசித்து வந்த இவன்,
ஐடியல் இந்தியன் பள்ளியில் படித்து வந்தான். இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலம் கோழிக்கோடு ஆகும்.
இதற்கிடையே, ரம்ஜான் பண்டிகையை கொண்டாட பஷீர் தனது குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை ஓட்டலுக்கு சென்றான். அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் பஷீர் அங்கு இல்லாததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, பஷீரின் குடும்பத்தினர் வக்ரா போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில், ஓட்டலின் அருகே இருந்த பாதாள சாக்கடையில் பஷீரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ரம்ஜானுக்கு முந்தைய நாள் பஷீர் மரணமடைந்த செய்தி, அவனது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்