கொள்கலன் வண்டியில் விபத்து ; பெற்றோல் சேகரிக்க சென்றவர்களில் 120 பேர் செத்து நொறுங்கிவிட்டனர்
பாகிஸ்தானின் கொள்கலன் வண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு 120 பேர் பலியாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பஞ்சாப் மாகாணத்தில், பகவ்பூரில் உள்ள வீதியில், அதிவேகமாக சென்ற பெற்றோல் ஏற்றி சென்ற கொள்கலன் வண்டி குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது.
இதனால், பெற்றோல் வீதியில் கொட்டியது. இதனை அங்கிருந்த மக்கள் சேகரித்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் கொள்கலன் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கி 120 பேர் உடல் கருகி பலியானார்கள்.
40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்