இருட்டில் கணவன் என நினைத்து.. பக்கத்து வீட்டுக்காரருடன் - வினோத வழக்கு
கரண்ட் கட் காரணமாக வீட்டிற்குள் நுழைந்த பக்கத்து வீட்டுக்காரரோடு, ஒரு பெண் படுக்கையை பகிர்ந்து கொண்ட விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரு விட்டின் கதவை தட்டியிருக்கிறார். தூக்க கலக்கத்தில் இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன்தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவை திறந்துவிட்டு, உள்ளே சென்று படுத்து விட்டார்.
உள்ளே சென்றவரும் அந்த பெண்ணின் அருகே சென்று படுத்துவிட்டார். கணவன் என நினைத்து அந்த பெண் அவருடன் படுக்கையையும் பகிர்ந்து கொண்டார்.
இருவரும் தூங்கிவிட்டனர். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து, அந்த நபர் பேண்ட் சட்டையை அணிந்து கொண்டு கிளம்பும் போது, வெளிச்சத்தில் அந்த பெண் அவரை பார்த்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய கணவன் இல்லை,
அது பக்கத்து வீட்டுக்காரர் என்று. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூப்பாடு போட, அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டனர்.
அப்பெண்ணின் கணவருக்கு இது தெரிய வர, இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்று விட்டது. தன்னுடைய கணவன் என நினைத்தே அவருடன் நெருக்கமாக இருந்ததாக அந்த பெண் கண்ணீர் விட்டு அழ, அவரின் வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது போலீஸ்.
இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்