Header Ads

வாங்கிய கடனை தராததால், காரை ஏற்றி கொலை செய்ய முயற்சிக்கும் போலிஸ்! அதிர்ச்சி வீடியோ

பட்டப்பகலில் பாதசாரியொருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காரை ஏற்றிக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று மும்பை, தானே பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


ரமேஷ் என்ற அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அத்துல் என்பவருக்கு மூன்று இலட்சம் ரூபாய்களை கடனாக வழங்கியிருந்தார். அதை குறித்த காலத்துக்குள் அத்துல் திருப்பித் தரவில்லை. இதனால் கோபமடைந்த ரமேஷ், அத்துல் மீது பட்டப்பகலில் காரை ஏற்றிக் கொல்ல முயற்சித்தார். 


இதன்போது, மோதுவதில் இருந்து தப்பிப்பதற்காக அத்துல் ரமேஷின் காரின் மீது ஏறிக்கொண்டார். சில அடி தூரம் காரின் மீது வைத்தே இழுத்துச் செல்லப்பட்ட அத்துல், தெய்வாதீனமாக எதுவித காயங்களும் இன்றி உயிர் பிழைத்தார். இச்சம்பவம், அங்கிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.