தலைகீழா பார்த்தா தமிழீழம் தெரியுதா? பரபரப்பை உருவாக்கியுள்ள காலா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ரஞ்சித் இயக்கவுள்ள ‘காலா’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியானது. இதில் ஒரு போஸ்டரில், ரஜினியின் முகம் மட்டும் தெரியும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த போஸ்டரை தலைகீழாக பார்த்தால் தமிழீழம் போல் தெரிவதாக ஒரு சிலர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்குத்தானே சூட்டி கொண்ட பெயர்களில் ஒன்று தான் கரிகாலன் என்றும் கூறப்படுகிறது.
இதை வைத்து பார்க்கும் போது இந்த படத்தில் தமிழீழ கருத்துக்களை ரஞ்சித் மறைமுகமாக கூறப்போவதாக வதந்தி ஒன்று படுவேகமாக டுவிட்டரில் பரவி வருகிறது. அட தமிழீழத்தை வைத்து எத்தனை பேர் பிழைப்பு நடத்துகிறார்கள் பாருங்கள் .. தமிழன் உருப்படுவானா ?

ஆக மொத்தத்தில் ரஜனியின் குட்டிக்குள் தான் தமிழ் ஈழம் உள்ளதா ?
ReplyDelete