தாயை கொலை செய்து ரத்தத்தில் ஸ்மைலி வரைந்த மகன் இவர்தான்! எதற்க்காக கொன்றான் என்று பாருங்கள்
மும்பையில் தனது தாயை கொன்று, அவரது ரத்தத்தில் ஸ்மைலி வரைந்து விட்டு சென்ற மகன் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போரா கொலை வழக்கு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்திராணி கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார். இந்நிலையில், ஷீனாபோரா கொலை வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தியானேஸ்வர் கனோரின் மனைவி சமீபத்தில் அவரது வீட்டுக்குள் வைத்தே குத்தி கொலை செய்யப்பட்டார்.
அந்த கொலை நடந்த தேதியிலிருந்தே அவரது மகன் சித்தாந்த் காணவில்லை. மேலும், அவரது உடலுக்கு அருகே தீபாலியின் ரத்தத்தினால் சில ஸ்மைலி வரைந்து “முடிந்தால் என்னை பிடித்து தூக்கில் போடுங்கள்” என எழுதப்பட்டிருந்தது.
விசாரணையில் கடந்த சில மாதங்களாக சித்தாந்தின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது தெரியவந்துள்ளது.
பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சித்தாந்துக்கு, அவரது தாய் தீபாலி செலவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். இதனால், தாய்-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்படி ஒரு சூழ்நிலையில் தனது தாயை சித்தாந்த் கொலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே, தலைமறைவான சித்தாந்தை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பதுங்கியிருந்த சித்தாந்த், இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். வழக்கம் போல் அன்று சண்டை ஏற்பட்டதாகவும், கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்து தனது தாயை கொன்று விட்டதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்